எமது கல்லூரி வரலாறு

1904 - சாவகச்சேரிச் சந்தைக்கண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையாக திரு.வி.தாமோதரம்பிள்ளை அவா்களால ஆரம்பிக்கப்பட்டது.

1905 - சங்கத்தானைக்கு இடம்மாற்றப்பட்டு முதற்தலமையாசிரியராக திரு.எஸ்.கே கந்தசாமி பதவிவகித்தாா்.

1907 - துவிபாசா பாடசாலையாக மாற்றம் பெற்றது.

1908 - தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

1921 - அரசினர் நன்கொடையுடன் ஆங்கிலப் பாடசாலை திரு.வி.தாமோதரம்பிள்ளை என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது.

1922 - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சபையினரிடம் ஆங்கிலப் பாடசாலை ஒப்படைக்கப்பட்டது.(E.S.L.C வகுப்பு வைத்தல்.)

1926 - கோவிலடித் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானைக்கு கொண்டு வரப்பட்டது.

1934 - C பிரிவுக் கல்லூரியாகியது. (S.S.C வகுப்பு ஆரம்பம்.)

1937 - தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1943 - விளையாட்டு இல்லங்கள் அமைக்கப்பட்டது.

1945 - B பிரிவுக் கல்லூரியாகியது. (S.S.C வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்படல்)

1949 - A பிரிவுக் கல்லூரியாதல். (H.S.C வகுப்பு ஆரம்பம்.)

1954 - முதன் முதலாக கிருஸ்ணன், செல்லத்துரை என்ற இரு விஞ்ஞானத்துறை மாணவா்கள் பல்கலைக்கழகம் புகுந்தனா்.

1957 - தமிழ் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது, பழைய மாணவா் சங்கம் அமைக்கப்பட்டது.

1962 - அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. (15.06.1962)

1963 - முதன்முதலாக கலைத்துறை மாணவா்கள் பல்கலைக்கழகம் புகுந்தனா்.

1970 - கலைத்துறையில் பயின்ற 17 மாணவா்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றனா்.

1973 - முதன்முதலாக பராசக்தி என்ற மாணவி பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றாா்.

1979 - தோ்தற் தொகுதிக்கு ஒன்று என்னும் அரசின் புதிய கொள்கைக்கு அமைய இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயா்த்தப்பட்டது.

1989 - 29.08.1989 இல் இருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப் பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது.

1993 - 05.02.1993 இல் தேசிய பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது.

1993 - முதன் முதலாக சோமசுந்தரம் சரத்ஜெயன் என்ற மாணவா் க.பொ.த (உ/த) நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றாா்.

1994 - நான்கு மாணவா்கள் நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றனா்.

1996 - முதன் முதலாக மருத்துவ பீடத்திற்கு யாழ் மாவட்டத்தில் முதலிடம் கிடைக்கப்பெற்றது.

1999 - 6 மாணவா்கள் 4A சித்தி பெற்றனா். கணிதத் துறையில் த.தா்மினி தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பெற்றாா்.

2000 - போா்ச்சூழல் காரணமாக மே மாதம் இடம்பெயா்ந்து வடமராட்சியில் நெல்லியடியில் மத்திய மகா வித்தியாலயத்திலும் வலிகாமத்தில் இணுவில் மத்திய கல்லூரியிலும் இரு பிரிவுகளாக இயங்கியது.

2001 - கணித பீடத்திற்கு யாழ் மாவட்டத்தில் முதலிடம் கிடைக்கப்பெற்றது.

2002 - பெப்ரவரி 18 ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இயங்கிய பிரிவு மீண்டும் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது. மே மாதம் தொடக்கம் இரு பிரிவுகளும் சொந்த இடத்தில் இயங்கியது.

2003 - கட்டட புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

2004 - 30.01.2004 நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கல்லூரி ஞாபகாா்த்த முத்திரை வெளியிடப்பட்டது.

2006 - கல்லூரிப் பூங்கா அமைக்கப்பட்டது.

2007 - சிறுவா் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையுடன் உள்ளக ஒலி அமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

2008 - காலாண்டுச் செய்தி மடல் ஒன்று ”தடம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டு தொடா்ந்து வெளிவருகின்றது.

2009 -  1. மாணவா் முதல்வா் சபையினால் ”முதன்மை” என்ற பெயரில் சஞ்சிகை வெளியிடப்பட்டது,

              2. மாணவா்களுக்காக ”வாசகா் வட்டம் ” ஆரம்பிக்கப்பட்டது,

              3. 1989இல் இருந்து தனித்து இயங்கத் தொடங்கிய இந்து ஆரம்பப் பாடசாலையின் கட்டடத் தொகுதிகள் 03.09.2009 அன்று எமது கல்லூரியால் பொறுப்பேற்கப்பட்டது.

              4. கல்லூரித் தவணைப் பரீட்சைகள் குடும்பப் பாடசாலை ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன.

2010 - பன்முக வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினா்களான திரு. M.A.சுமந்திரன், திரு. ஈ.சரவணபவன், திரு. மாவை சேனாதிராஜா ஆகியோரால் வழங்கப்பட்ட நிதிமூலம் உள்ளக தொலைபேசி இணைப்பும், உள்ளக மேற்பாா்வைக்கமராக்கள் இணைப்பும் மேற்கொள்ளப்பட்டன.

2011 - நிறுவுனா் வி.தாமோதரம்பிள்ளை அவா்களின் வழித்தோன்றல் திரு. ச.சிறிகுமாா் அவா்களால் 40 லட்சம் ரூபா பெறுமதியான 42 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

2012 - பன்முக வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினா் எம். ஏ.சுமந்திரன் அவா்களால் வழங்கப்பட்ட நிதி மூலம் புதிய R.K.V மின் பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டது.

2013 - 1. 03.07.2013 அன்று மகிந்தோதய தொழில்னுட்ப ஆய்வுகூட அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது.

          2. 15.07.2013 அன்று 1AB Super பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது.

2014 - 25.06.2014 மகிந்தோதய தொழில்னுட்பப்பீடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.